Sகளங்கம்: பன்னீர் மகன் விளக்கம்!

Published On:

| By Balaji

குச்சனூர் கல்வெட்டு விவகாரம் தொடர்பாக தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், ரவீந்திரநாத் பெயருக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகளே வெளியாகாத நிலையில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் பெயருடன் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், கல்வெட்டில் இருந்த பெயர்களை கோயில் நிர்வாகம் மறைத்துவிட்டது.

இதுதொடர்பாக இன்று (மே 18) விளக்கமளித்துள்ள ரவீந்திரநாத் குமார், “குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்திரநாத் பெயரை கல்வெட்டில் எம்.பி எனக் குறிப்பிட்டு பொறித்தது குறித்து ரவீந்திரநாத் குமார் சார்பில் தேனி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின் பேரில், குச்சனூர் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share