Sஓணத்துக்கு தயாராகும் நயன்தாரா

Published On:

| By Balaji

நயன்தாரா – நிவின் பாலியுடன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் மலையாளப் படமான லவ் ஆக்‌ஷன் டிராமா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

நயன்தாரா மலையாளத்திலிருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்தும், தனது நிலையான கவனத்தையும் செலுத்தி வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன், மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான புதிய நியமம் படத்திற்குப் பின் வேறு படத்தில் நடிக்கவில்லை. இப்படத்திற்குப் பின், அவர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வரும் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்துவந்தார்.

கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம்(செப்டம்பர்) அன்று வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

இந்த படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் தம்பியான த்யான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் டி ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓணத்தின் போது வெளியாகவுள்ள படத்தை குறிக்கும் விதமாக, நயன்தாரா விளக்கை ஏற்றும் போஸ்டர் வந்துள்ளது.

நயன்தாரா தற்போது தர்பார் படத்திற்காக ஜெய்பூரில் ரஜினிகாந்துடனான பாடல் காட்சியில் நடித்து வருகிறார். விஜய்யுடன் நடித்து வரும் பிகில் படப்பிடிப்பில் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் நிறைவுற்ற நிலையில் அப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

**

மேலும் படிக்க

**

**[முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/18/30)**

**[தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/19/13)**

**[முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/18/44)**

**[பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/18/33)**

**[காஷ்மீர் சிறைகளில் இடமில்லை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/19/15)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel