sஒரே நாடு ஒரே தேர்தல் விஷச்செடி: ப.சிதம்பரம்

public

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற விஷச்செடி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள (ஜேடிஎஸ்) கூட்டணியை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது எம்.எல்.ஏக்களின் ராஜினாமா, தகுதிநீக்கம் குறித்து ஜூலை 16ஆம் தேதி வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகளின் தலைமையில் இன்று (ஜூலை 13) இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், “ஜனநாயகத்திற்கு பேராபத்து வந்திருக்கிறது. பாஜக அல்லாத ஆட்சிகளை ஒவ்வொன்றாக கலைப்பதென்று முடிவெடுத்து, கர்நாடகத்தில் தொடங்கி இன்று ஒவ்வொரு மாநிலமாக தாக்குதல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்திற்கு பின்னால் இருக்கும் விஷம எண்ணம் என்னவென்றால், ஒரே நாடு ஒரே கட்சி ஒரே வேட்பாளர் என்று பல நாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றன. அந்தப் பாதையில் ஒவ்வொரு அடியாக மோடி அரசு எடுத்து வைக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அமலில் இல்லாமல் அடைக்கலமாக இருப்பது பாஜகவின் ஆட்சியில். கட்சியை விட்டு தாவாதே, கட்சியை விட்டு விலகிவிடு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடு, இடைத்தேர்தல் வரும், இடைத்தேர்தலில் என்னுடைய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறலாம், பணம் தருகிறேன், வெற்றிபெற்றபின் அமைச்சராகலாம் என்று ஆசைவார்த்தை காட்டி கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை அர்த்தமற்றதாக மாற்றுகின்றனர்.

சுதந்திரம் பெற்ற பல நாடுகள் சர்வாதிகார நாடுகளாக மாறியதைப் போல இந்தியாவையும் சர்வாதிகார நாடாக மாற்றும் பேராசையில் துடிக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நனவாகாது. பல கட்சிகள் தோன்றி, கொள்கை வகுத்து, கருத்துகளை சொல்லி, ஆட்சி செய்யும் ஜனநாயக நாடுதான் இந்தியா. பாஜகவின் போக்கை கண்டித்து தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போர்க்குரல் எழுந்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற விஷச்செடியை கிள்ளி எறிய வேண்டும். அப்படி கிள்ளி எறியாவிடில் விஷச்செடி நாடு முழுவதும் பரவி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிடும்” என்று தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *