Sஐஆர்சிடிசி : லாலுவுக்கு சம்மன்!

public

இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நேரில் ஆஜராக டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 30) உத்தரவிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஒப்பந்தங்களைத் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதாகக் கூறி , அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இவர்களைத் தவிர இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா மற்றும் அவரது மனைவி சரளா குப்தா,அப்போதைய ஐஆர்சிடிசி நிர்வாக மேலாளர் பி.கே. அகர்வால், அப்போதைய இயக்குநர் ராகேஷ் சக்ஸேனா ஆகியோரும் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியது.

மேலும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட சுஜாதா ஹோட்டல் நிறுவன உரிமையாளர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி, மகன் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *