Sஅபிநந்தனுக்கு 3 வாரம் விடுமுறை?

Published On:

| By Balaji

q

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்பும் முன் அவருக்கு 3 வார காலம் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிப்ரவரி 26ஆம் தேதி காஷ்மீர் எல்லைக்கோட்டில் நடந்த சண்டையில் மிரேஜ் 2,000 ரக விமானத்தில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த அபிநந்தனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்திலிருந்து பராசூட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் குதித்த அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தால் பிடிக்கப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அப்போது முதல் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அபிநந்தன் தற்போது உடல்நலம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இன்னும் 3 வார கால ஓய்வுக்குப் பிறகே அவர் பணிக்கு திரும்புவார் என்று *பிடிஐ* செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அபிநந்தனின் உடல் நலம் தொடர்பான மருத்துவ அறிக்கை இந்திய விமானப் படையிடம் மருத்துவ வாரியத்தால் அளிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப் படை அபிநந்தனை மீண்டும் எப்போது பணியில் சேர்க்கலாம் என்று முடிவு செய்யும்.

மீண்டும் விமானப் படையில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்பு, அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்ட சம்பவத்திலிருந்து மன ரீதியாக முழுமையாக நலம் பெறவே அவருக்கு 3 வார காலம் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share