இனி எந்தவொரு தனிநபரையும் அவரது அனுமதியின்றி வாட்ஸப் குழுக்களில் இணைக்கமுடியாது.
வாட்ஸப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலிக்காக தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த அப்டேட்டையும் வாட்ஸப் தயார் செய்துவிட்டது. வாட்ஸப்பில் யார் யாரோ நம்மை நமது அனுமதியின்றி குழுக்களில் இணைந்து தொல்லை கொடுப்பதை பார்த்திருக்கிறோம். குழுவை விட்டு வெளியேறினாலும் மீண்டும் மீண்டும் சேர்க்கப்பட்டு எரிச்சலடைய செய்துவிடுவார்கள். இதை சரிசெய்ய பல ஆண்டுகளாக வாட்ஸப் நிறுவனம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தனது அடுத்த அப்டேட்டில் இந்த சிக்கலை தீர்க்க வாட்ஸப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ஒரு வாட்ஸப் குழுவின் நிர்வாகி, அக்குழுவில் யார் யாரை இணைக்க விரும்புகிறாரோ அவர்களுக்கு அழைப்புகளை விடுக்கலாம். அழைப்புகளை ஏற்கும் நபர்கள் மட்டுமே அந்த குழுவில் இணைய முடியும். இந்த புதிய அம்சம் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் கருவிகளுக்கான வாட்ஸப் பீட்டா வெர்ஷனில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை எனவும், மேற்கொண்டு மேம்படுத்தப்படும் எனவும் தெரிகிறது. வாட்ஸப் குழுக்களின் தொடர் தொல்லைகள் குறித்து பல பயனர்கள் புகாரளித்து வந்த நிலையில் வாட்ஸப் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.�,