பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் சிலர் அதிரடியாக கழட்டி விடப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போன்று பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 தொடர் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் பிஎஸ்எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய தொடரில் இருந்து 10 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது ஷாஹித் அஃரிடி, குமார் சங்கக்காரா, கெய்ரன் பொல்லார்டு, ஷகிப் அல் ஹசன், முஹமது ஹபீஸ் ஆகியோர் அவர்களது அணியிலிருந்து அதிரடியாகக் கழட்டி விடப்பட்டுள்ளனர்.
அதேபோல் டி வில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், ஆண்ட்ரே ரசல், டிவைன் பிராவோ, ரஷித் கான், இயன் மார்கன், பிரெண்டன் மெக்குல்லம் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். வரும் 20ஆம் தேதியன்று நடக்கவுள்ள வீரர்கள் ஏலத்தில் இவர்கள் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டு, பின்னர் வெவ்வேறு அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றிலும் வர்த்தகமயமாக மாறிவிட்ட டி20 தொடர்கள் ஆரம்ப காலத்தில் அனுபவ வீரர்களைக் கொண்டு பிரபலப்படுத்தப்படுவதும்; அவை பிரபலமான பின்னர் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் புதிதான ஒன்றல்ல. இதற்கு பிஎஸ்எல் மட்டும் விதி விலக்கல்ல.�,