Sஅதிக தேவை: குறைவான பேருந்துகள்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு 30 லட்சம் பேருந்துகள் தேவைப்படுகிற நிலையில், 2.8 லட்சம் பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து மத்திய அரசு புள்ளிவிவரமொன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் 19 லட்சம் பேருந்துகள் இருந்தாலும், மாநில அரசுகளின் கீழ் அல்லது மாநில அரசுகளின் அனுமதி பெற்று 2.8 லட்சம் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதுகுறித்து இந்தியா டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கான சேவையைச் சரியாக வழங்காத மற்றும் போதுமான அளவில் பேருந்துகள் இல்லாததால், மக்கள் சொந்த வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர் என்று பொதுப் போக்குவரத்து துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்தியப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், சீனாவில் 1,000 மக்களுக்கு ஆறு பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்தார். “இந்தியாவில் 10,000 பேருக்கு நான்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 90 சதவிகித இந்தியர்களுக்கு எந்தவொரு வாகனமும் இல்லை. அவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கின்றனர். காரணம், பொதுப் போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மை. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் கால் டாக்ஸி கிடைத்தாலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகளவில் இருக்கத்தான் செய்கின்றனர்” என்று அவர் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share