sஅதிகரிக்கும் பயன்பாட்டால் குறையும் வேகம்!

Published On:

| By Balaji

மொபைல் இண்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு வேகங்களில் சர்வதேச அளவில் இந்தியா மூன்று இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்தியாவில் குறைந்த டேட்டா கட்டணம், குறைந்த விலைச் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை போன்ற காரணங்களால் இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ள இந்தியாவில் இணையப் பயன்பாடும் துரிதமாக அதிகரித்து வருவதால் இணைய வேகம் மந்தமாகவே இருக்கிறது. தரத்தை உயர்த்த நெட்வொர்க் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டாலும் அதிகப் பயன்பாட்டால் இணைய வேகம் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது மந்தமாகவே உள்ளது.

இந்நிலையில், இணையதள வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஊக்லா நிறுவனம் சர்வதேச அளவில் உலக நாடுகளின் இணைய வேகம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதத்தில் பிராட்பேண்ட் இணைய வேகத்தில் 71ஆவது இடத்தில் இருந்த இந்தியா, ஜூன் மாதத்தில் 74ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மொபைல் இணைய வேகத்தில் இந்தியா 126ஆவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. மே மாதத்தில் இப்பிரிவில் இந்தியா 123ஆவது இடத்தில் இருந்தது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிராட்பேண்ட் இணைய வேகத்தில் 56ஆவது இடத்திலும், மொபைல் இணைய வேகத்தில் 111ஆவது இடத்திலும் இந்தியா இருந்தது.

மொபைல் இணைய வேகத்தில் 90.06 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் தென்கொரியா முதலிடத்தில் இருக்கிறது. பிராட்பேண்ட் இணைய வேகத்தில் 195.88 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜூன் மாதத்தில் சராசரி மொபைல் பதிவிறக்க வேகம் 10.87 எம்.பி.பி.எஸ்ஸாகவும், பிராட்பேண்ட் பதிவிறக்க வேகம் 29.06 எம்.பி.பி.எஸ்ஸாகவும் இருந்துள்ளது. முந்தைய மே மாதத்தில் சராசரி மொபைல் இணைய வேகம் 11.02 எம்.பி.பி.எஸ்ஸாகவும், பிராட்பேண்ட் இணைய வேகம் 30.03 எம்.பி.பி.எஸ்ஸாகவும் இருந்தது.

இந்தியாவில் மொபைல் சேவைக்கான உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக ஊக்லா நிறுவனத்தின் துணை நிறுவனரும் பொது மேலாளருமான டப் சட்டில்ஸ் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share