உக்ரைனின் சிவிரோடோனெட்ஸ்க் நகர் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் சென்றது!

public

டந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போரானது 120 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேடோவில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் நாட்டை எச்சரித்த ரஷ்யா இந்தப் போரைத் தொடங்கியது. அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவளித்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
அமெரிக்கா உக்ரைனுக்கு அளித்த அதிநவீன ராக்கெட்டுகளால் உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படையெடுப்பைத் தடுக்க முடிந்தது. இந்த நிலையில் ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியை குறிவைத்து தாக்க தொடங்கியது. உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் ரஷ்யப் படை முன்னேற்றத்தைத் தடுத்து வந்தனர். உக்ரைனில் சிவிரோடோனெட்ஸ்க் நகரின் சில பகுதிகளைக் கைப்பற்றிய ரஷ்யா அதை முழுமையாக கைப்பற்ற தாக்குதல்களை கடுமையாக்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் கிழக்கு பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் சிவிரோடோனெட்ஸ்க் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலங்களையும் அழித்து அந்தப் பகுதியின் போக்குவரத்து வழி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைனின் சிவிரோடோனெட்ஸ்க் நகரம் முழுவதும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று சிவிரோடோனெட்ஸ்க் மேயர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *