‘இன்றைக்கு நீரிழிவாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி ஆகட்டும்… அரிசி, நொய், பார்லி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, கொள்ளு, உளுந்து ஆகியவற்றில் தயாரிக்கப்படுவதாகட்டும்… அனைத்துமே ஒவ்வொருவிதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் சோர்வுற்று இருக்கும் நேரத்தில் ஒருவாய் கஞ்சியைக் குடித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தால் அதில் கிடைக்கும் புத்துணர்ச்சியே தனி. இன்றைக்கு அரிசி மோர் கஞ்சியை அருந்துவோம்.
**எப்படிச் செய்வது?**
ஐந்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கப் புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். இதனுடன் சிறிதளவு உப்பு, இரண்டு கப் மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.
**சிறப்பு**
இந்தக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் தருபவை.�,