Sரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் கபாப்!

Published On:

| By Balaji

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எதை சாப்பிடலாம் என்று உணவுப் பொருட்களைத் தேடி அலையும் காலமாகிவிட்டது இது. அதற்கு பழ வகைகள் நிச்சயம் உதவும். சிற்றுண்டிக்குப் பின் காலை நேரங்களிலோ அல்லது மாலை நேரங்களிலோ சோர்வாக உணரும் தருணங்களில் பழங்களை உண்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.

**எப்படிச் செய்வது? **

வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் என்று விரும்பிய பழங்களைத் துண்டுகளாக்கி டூத் பிக்கில் வரிசையாகக் குத்தி வைக்கவும். விரும்பும்போது இதன் மீது தேன் ஊற்றி சாப்பிடவும்.

**சிறப்பு**

குறிப்பாக வயதானவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். புத்துணர்ச்சியைத் தரும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share