கடந்த 10ஆம் தேதி வரை பதிவுத் துறையின் வருவாய் ரூ.9,000 கோடியை கடந்துள்ளதாக தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு ஆண்டில் ரூ.15,000 கோடி வருவாய் இலக்கினை அடைய அனைத்து உதவி பதிவுத் துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்களை அரசின் வருவாயை பெருக்குவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நிதியாண்டில் 10ஆம் தேதி வரை ஈட்டப்பட்டுள்ள ரூ.9,000.36 கோடி வருவாயானது, 2020-21 நிதியாண்டில் டிசம்பர் 2020 முடிய அடைந்த ரூ.7,030.59 கோடி வருவாயைவிட ரூ.1,969.77 கோடி அதிகமாகும்.
வழிகாட்டி மதிப்புக்குக் குறையாமல் ஆவண சொத்துகளின் மதிப்பை உறுதி செய்தல், ஆவணங்கள் சரியாக இருப்பின் அவற்றைப் பதிவு செய்து உடனடியாக விடுவித்தல், சிறப்பு முயற்சிகள் மேற்கொண்டு தணிக்கை இழப்புகளை வசூலித்தல் முதலான யுக்திகளைக் கையாண்டு ரூ.15,000 கோடி வருவாய் இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,