காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் பறங்கிக்காயின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. பார்க்க பருமனாக இருக்கும் பறங்கிக்காய்க்கு நம் உடல் பருமனைக் குறைக்கும் திறன் அதிகம். ரிலாக்ஸ் டைமில் இந்த பறங்கிக்காய் பாயசம் உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.
எப்படிச் செய்வது?
50 கிராம் பாசிப்பருப்பைச் சிறிதளவு நெய்யில் வாசனை வரும் வரை வறுத்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். 150 கிராம் பறங்கிக்காய் நறுக்கி நன்கு மசியும் வரை வேக வைக்கவும். 300 கிராம் வெல்லத்தை நன்றாக இடித்து வேகவைத்த பருப்பு, மசித்த பறங்கிக்காய் சேர்த்து ஒரு கப் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கடாயில் நெய்யைக் காயவைத்து எட்டு முந்திரி, ஒரு கைப்பிடி அளவு திராட்சையை வறுத்து, பாயசத்தில் நெய்யுடன் ஊற்றவும். அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் அரை கப் தேங்காய்த் துருவலைச் சிறிதளவு நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்துப் பரிமாறவும்.
சிறப்பு
உடனடி சக்தியைக் கொடுக்கும். அலர்ஜி, பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தியும் பறங்கிக்காய்க்கு உண்டு.
�,