மந்தமான சூழ்நிலையில் காலையில் சாப்பிட வேண்டிய உணவைத் தவறவிட்டவர்கள், ரிலாக்ஸ் டைமில் இந்த வேர்க்கடலை – அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
எப்படிச் செய்வது?
ஒரு கப் வேர்க்கடலையையும் கால் கப் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த வேர்க்கடலை, கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துண்டு, ஒரு டீஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தாளித்து வேர்க்கடலை கலவையில் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சிறப்பு
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அனைவருக்கும் ஏற்றது.
�,