பனீரைக்கொண்டு குழந்தைகளைக் குஷிப்படுத்தும் ஸ்நாக்ஸ், சத்தான இனிப்புகள், ருசியான சைடிஷ்கள், ரிச்சான டெசர்ட்டுகள் போன்றவற்றைச் செய்ய முடியும். அவற்றில் சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது இந்த பனீர் ஆம்லெட். ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்ற இந்த ஆம்லெட் உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.
எப்படிச் செய்வது?
200 கிராம் துருவிய பனீர், ஒரு கப் கடலை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், பொடியாக நறுக்கிய அரை கப் கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய அரை கப் கொத்தமல்லித்தழை, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையானஅளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். ஒரு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய்விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி, மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும். இதை தக்காளி சாஸ் / புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.
சிறப்பு
புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ள பனீர், உடலுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.
�,