ரிலாக்ஸ் டைம்: வெங்காயத்தாள் சூப்!

Published On:

| By Balaji

காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தாள் கண்ணில்படும்போதெல்லாம் ‘சூப், புலாவில் தூவுகிற விஷயம்தானே’ என்று கடந்துசென்றுவிடுவோம். உண்மையில் ஏராளமான சத்துகளைத் தனக்குள் தக்கவைத்துக் கொண்டு அமைதி காக்கிறது வெங்காயத்தாள். ரிலாக்ஸ் டைமில் இந்த வெங்காயத்தாள் சூப் அருந்தி உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படி செய்வது?

ஒரு தக்காளி, கால் அங்குலத் துண்டு இஞ்சியை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் நறுக்கிய கால் கப் குடமிளகாய், நறுக்கிய ஒரு கப் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். தக்காளி – இஞ்சி சாற்றை ஊற்றவும். தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். இரண்டு கப் தேங்காய்ப்பால் ஊற்றி, மிதமான தீயில் அடுப்பை வைத்து சூப்பைக் கொதிக்கவிடவும். ஒரு கொதிவந்ததும் அடுப்பை நிறுத்தி, சூப் பவுலுக்கு மாற்றி ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் தூவி, நறுக்கிய ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சேர்த்துப் பருகவும்.

சிறப்பு

இதில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் நிறையவே இருக்கின்றன. கால்சியமும் பொட்டாசியமும் மெக்னீசியமும் நிறைந்துகாணப்படுகின்றன. அவற்றோடு வைட்டமின்கள் ஏ, சி, பி6 ஆகியவையும் உள்ளன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share