வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா என்று விதவிதமான பக்கோடாக்களை ருசித்து இருப்போம். பாகற்காயை வைத்து இந்த பக்கோடா செய்து இன்றைய ரிலாக்ஸ் டைமுக்குப் புத்துணர்வு தருவோம்.
எப்படிச் செய்வது?
தேவையான அளவு நீரை சூடாக்கி விதை நீக்கி பொடியாக நறுக்கிய 200 கிராம் பாகற்காயைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். இதனுடன் 100 கிராம் கடலை மாவு, 20 கிராம் அரிசி மாவு, சிறிதளவு புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, காரக்கேற்ப மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும். இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சிறப்பு
பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் (Anti-oxidant) அதிக அளவில் உள்ளதால் செரிமானத்துக்கு உதவும். பசியையும் அதிகரிக்கும்.கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கும்.
�,