உடல்நலம் சரியில்லாதபோது பரிந்துரைக்கப்படும் முக்கிய உணவு பார்லி. நார்ச்சத்து, மெக்னீசியம், செலினியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கொண்ட பார்லி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். அப்படிப்பட்ட பார்லியுடன் காய்கறிகள் சேர்த்து பருகினால் உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
எப்படிச் செய்வது?
அரை கப் பார்லியைத் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்பு வாணலியில் தண்ணீர்விட்டு நறுக்கிய கேரட் ஒன்று, நறுக்கிய குடமிளகாய் பாதி அளவு, நறுக்கிய பீன்ஸ் கால் கப் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அதில் நசுக்கிய இரண்டு நசுக்கிய பூண்டு பற்கள், சிறிதளவு கொத்தமல்லித்தழை, தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பார்லியைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
சிறப்பு
புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்துகளைக் குறிப்பிட்டத்தக்க அளவில் கொண்டிருக்கிறது பார்லி சூப் அனைவருக்கும் ஏற்றது.
�,