அதிக திறன்கொண்ட கேமரா, அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மீயின் புதிய மொபைல்போன் இந்தியாவில் களமிறங்குகிறது.
இந்தியச் சந்தையில் கால் பதித்து ஒரு வருடமே ஆகும் நிலையில் ரியல்மீ நிறுவனம் சீரான வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்குத் தகுந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ரியல்மீ நிறுவனம் ரியல்மீ X2 ப்ரோ மற்றும் ரியல்மீ 5எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மீ X2 ப்ரோ மூன்று வகைகளில் கிடைக்கவிருக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ரியல்மீ X2 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ 29,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் 33,999 ரூபாய் எனவும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் பெற்றிருக்கும் மாஸ்டர் எடிஷன் 34,999 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களில் உள்ள 50W சூப்பர் VOOC ஃப்ளாஷ் சார்ஜின் மூலமாக 4000 எம்ஏஎச் பேட்டரியை, வெறும் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 9,999 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும், 48MP முதன்மை சென்சாருடன் கூடிய குவாட் ரியர் கேமரா உட்பட பயன்பாட்டாளர்கள் விரும்பும் பல அம்சங்களோடு ரியல்மீ 5எஸ் மொபைல் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த ரியல்மீ 5எஸ் ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 SOC ப்ராசஸர், 6.5 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. அதே போன்று 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மீ 5எஸ் வேரியண்ட் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்டல் ப்ளூ, கிரிஸ்டல் பர்பில் மற்றும் கிரிஸ்டல் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் களமிறங்கவிருக்கும் ரியல்மீ 5எஸ் ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ.காம் போன்ற தளங்களில் வரும் நவம்பர் 29 முதல் விற்பனைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
�,”