yமுதல்வரின் மாமனாருக்கு உயரதிகாரிகள் அஞ்சலி!

Published On:

| By Balaji

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன், அவரது சொந்த ஊரான சேலம் தேவூர் அருகில் உள்ள அம்மாபாளையம் வீட்டிலிருந்தபோது தீபாவளியன்று ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.

முதல்வர் வீட்டுத் துக்கம் என்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் சேலத்தில் தங்கியிருந்த முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். துக்கத்துக்கு வந்த முக்கிய நபர்களிடமும், உறவினர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் விட்டு அழுதுள்ளார்.

“ சி.எம். பதவியில் உட்கார்ந்த பிறகும் எனக்குத் தெரியாமலே, அமமுகவுக்குச் சென்ற எம்.எல்.ஏ.க்களிடம் சமாதானம் பேசியுள்ளார். இதுபோல் எனக்காக கஷ்டப்பட்ட மாமாவை கவனிக்காமல் விட்டுவிட்டேனே”என்று முதல்வர் அழ அவரை குடும்பத்தினரும் நண்பர்களும் தேற்றினார்கள்.

இந்த நிலையில்தான் நேற்று (அக்டோபர் 28)மாலை 5.30 மணிக்கு டி.ஜி.பி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மூவரும் சென்னையிலிருந்து விமானம் மூலமாகக் கோவைக்குச் சென்றவர்கள், அங்கிருந்து சாலைவழியாக மூவரும் ஒரே காரில் சேலம் பயணித்தார்கள்.

இரவு சுமார் 9.00 மணியளவில் சேலம் அம்மாப்பாளையத்தில் உள்ள முதல்வர் மாமனார் வீட்டுக்குச் சென்று, காளியண்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு உறவினர்களிடம் சிறிது நேரம் துக்கம் விசாரித்துட்டு முதல்வரைப் பார்க்கலாம் என்று நினைத்து கேட்டிருக்கிறார்கள்.

‘ சி.எம். ரொம்ப டயர்டாகிட்டார். உங்களைக் காலையில் 8.30 மணிக்குச் சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுத்துள்ளார்’ என்று முதல்வரின் வீட்டில் இருந்து தகவல் வந்ததும் பொதுப்பணித்துறை கெஸ்ட் அவுஸில் தங்கினார்கள் மூவரும்.

இன்று காலையில் முதல்வரைச் சந்திக்க, தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, கமிஷனர் விஸ்வநாதன் மூவரும் சென்றார்கள். 15 நிமிடங்கள் சந்திப்பில் பத்து நிமிடங்கள் தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் நிர்வாக ரீதியாகப் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சந்திப்பு முடிந்ததும் மூன்று உயர் அதிகாரிகளும் 10.30 மணிக்குச் சேலம் ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டுவிட்டார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share