உப்புமா, கிச்சடி, கேசரி, லட்டு… இவற்றைத் தவிர ரவையைப் பயன்படுத்தி வேறென்ன செய்துவிட முடியும்… ரிலாக்ஸ் டைமுக்கேற்ற இந்த ரவா ஃபிங்கர்ஸும் செய்யலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
வெறும் வாணலியைச் சூடாக்கி ஒரு கப் ரவையை 3 முதல் 4 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ரவை நன்கு வெந்து மென்மையான கலவையாக மாறும்வரை கிளறி பின்னர் இறக்கி சற்று ஆறவைக்கவும்.
ஒரு பவுலில் ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துச்சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய நான்கு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். பிறகு வேகவைத்த ரவையையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து மாவாகப் பிசையவும்.
கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு மாவை விரல் போன்ற வடிவங்களாகச் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மிதமான தீயில் அவற்றைப் பொரித்தெடுக்கவும்.
�,