கிச்சன் கீர்த்தனா: ரம்ஜான் ஸ்பெஷல் – பாதாம் சர்பத்

public

�நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவும். அந்த வகையில் இந்த பாதாம் சர்பத்தை இஸ்லாமியர்கள் நோன்பு மாதத்தில் அடிக்கடி உட்கொள்வார்கள். கோடையைத் தணிக்க நாமும் பருகலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**என்ன தேவை?**

பாதாம்பருப்பு – 10 முதல் 15 வரை (குறைந்தது 5 மணி நேரம் ஊறவைக்கவும்)

பால் – ஒரு லிட்டர்

சோள மாவு – 2 டீஸ்பூன்

கிர்ணி விதைகள் – 2 டீஸ்பூன்

பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்

துண்டு துண்டாக நறுக்கிய பாதாம் பருப்பு – 5

சர்க்கரை – 5 டீஸ்பூன்

சர்பத் சிரப் – 4 டீஸ்பூன்

சப்ஜா விதைகள் – 2 டீஸ்பூன் (தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்)

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி பின்பு அடுப்பை சிம்மில் வைத்து அரைத்த பாதாமை, பாலுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு சோள மாவு, ஏலக்காய்த்தூள், கிர்ணி விதைகள், நறுக்கிய பாதாம் துண்டுகள், பால் பவுடர் மற்றும் சர்க்கரையையும் இதனுடன் ஒவ்வொன்றாகச் சேர்த்து 12 நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கலவையை நன்றாக ஆறவிடவும். இப்போது அதில் சப்ஜா விதைகள் மற்றும் சர்பத் சிரப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குளிர்ச்சியும் ஆரோக்கியமும் தரும் பாதாம் சர்பத் ரெடி. இதை அப்படியே பருகலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: ரம்ஜான் ஸ்பெஷல்: ரஸ்க் அல்வா](https://www.minnambalam.com/public/2021/05/06/1/rusk-halva)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.