@யார் இந்த புது ‘ஸ்மிதா’?

Published On:

| By Balaji

மூடர் கூடம் படத்துக்குப் பிறகு இயக்குநர் நவீன் இயக்கும் திரைப்படம் அக்னிச் சிறகுகள். அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் வகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகையான ரைமா சென் கேரக்டரின் புகைப்படம் வெளியிடப்பட்டு, இந்த மழைக்காலத்திலும் மிகப்பெரிய அனலை உருவாக்கியிருக்கிறது.

விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷரா ஹாசனின் கேரக்டர் போஸ்டர், துப்பாக்கிகள் நிறைந்த போஸ்டர் மற்றும் அக்‌ஷரா ஹாசனை இழுத்துக்கொண்டு விஜய் ஆண்டனி ஓடுவது போன்ற போஸ்டர்கள் வெளியானபோது, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படம் என்பது தெரிந்தது. அதேசமயம், அருண் விஜய்யின் கேரக்டர் போஸ்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டதால் அவரது வில்லன் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விதமாக ‘ஸ்மிதா’ என்ற கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தி மற்றும் பெங்காலி திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ரைமா சென், ‘ஸ்மிதா’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்திருக்கிறார். 1999இல் அறிமுகமானதிலிருந்து இப்போது வரை தனது நடிப்புத் திறமையால் சினிமாவில் தன் இடத்தைத் தக்க வைத்திருக்கும் ரைமா சென்னுக்கு இப்போதைய வயது 40. சட்டை பட்டன்கள் அணியாத ரைமா சென் புகைப்படத்தை நவீன் பதிவு செய்ததிலிருந்து, பலரும் அதனை ஷேர் செய்துகொண்டிருந்தனர். ஆனால், ரைமா சென் பற்றி அறிந்தவர்கள் அவரது வயதை பதிவு செய்ததும் 40 வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று புகழ்ந்துவருகின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும், கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை “அக்னிச் சிறகுகள்” பெற்றுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் இதன் தயாரிப்பாளர் டி.சிவா.

அக்னிச் சிறகுகள் படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே ஆகியோர் நடிக்கின்றனர். நவீனின் முதல் படமான மூடர் கூடம் படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share