Jரிலாக்ஸ் டைம்: ராகி பக்கோடா!

Published On:

| By Balaji

ரிலாக்ஸ் டைமில் பக்கோடா சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், சட்டென்று, எளிதாக, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த ராகி பக்கோடா செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

நீளவாக்கில் நறுக்கிய இரண்டு வெங்காயத்தை ஒரு தட்டில் போடவும். உலர்ந்த கேழ்வரகு மாவு ஒரு கப், கடலை மாவு இரண்டு டீஸ்பூன், அரிசி மாவு இரண்டு டீஸ்பூன்… இந்த மாவுகளுடன் சோம்புத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் மசாலா பொடிகளையும் தேவையான அளவு தூள் உப்பையும் நன்றாகக் கலந்து வெங்காயத்தின் மேல் தூவவும். அத்துடன் இஞ்சி – பூண்டு விழுது அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

ரத்த சோகை, அதிக எடை, தூக்கப் பிரச்சினைகள், பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஓர் ஆரோக்கிய உணவாகும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share