உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா, ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக HMD Global நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து மீண்டும் மொபைல் உலகில் புரட்சி செய்ய வந்துள்ளது நோக்கியா. சர்வதேச மொபைல் காங்கிரஸ் (WMC) விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா மொபைல்போன்கள், உலகிலுள்ள 120 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. ஆனால் அந்த 120 நாடுகளில் இந்தியா இடம்பெறும் என குறிப்பிட்டு சொல்லவில்லை. இருப்பினும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நாடுகள் இன்னும் பல இருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவில் நோக்கியா பயனர்கள் அதிகம் என்பதால் நிச்சயம் இங்கு வெளியாகும்.
நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல்போன்கள் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதத்தின் தொடக்கத்திலோ வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்திய ரூபாயில் புதிய நோக்கியா 3 மாடல் ரூ.9,800-க்கும், நோக்கியா 5 ரூ.13,500-க்கும், நோக்கியா 6 ரூ.16,000-க்கும், நோக்கியா 3310 ரூ.3,500-க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேசிக் மாடல் முதல் ஒரு குறிப்பிட்ட விலைகொண்ட மாடல் வரை இந்த வெளியீடு இருப்பதால் நோக்கியா நிறுவனத்துக்கு இது மிகப்பெரும் கம்ஃபேக் என்றே கூறலாம்.�,