Rகாதலில் விழுந்த விஜய் சேதுபதி!

public

7

‘நானும் ரவுடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பின், ரசம் கூட்டுப் பொரியல் அப்பளத்துடன் அந்தக் கூட்டணியை இலையோடு நகர்த்திக்கொண்டு வந்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அப்புறம் கூட்டு தனியாக, பொரியல் தனியாகப் போய், கடைசியாக மிஞ்சியது விஜய் சேதுபதி மட்டும்தான். இருந்தாலும், ‘இந்தப்படத்தை நானும் ரவுடிதான் படத்தைவிட பெரிய ஹிட்டாக்கி காட்டல… என் பேரு ரத்னம் இல்லே’ என்கிற கோபத்துடன் அவர் உழைத்த உழைப்புதான் இப்போது சிறப்பாக வந்து நிற்கிறது. ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கருப்பன்’.

கருப்பன் ஆக் ஷன் படம் என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அருமையான காதல் படமாக வந்திருக்கிறதாம். விஜய் சேதுபதி கேரியர்ல வேற லெவல் படமாக இருக்கும் என்று இப்பவே பாராட்டுக் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. தற்போது விஜய் சேதுபதி காதல் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் படபூஜை ஆரம்பிக்கப்பட்ட ‘96’ திரைப்படமும் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படமான ‘பலே வெள்ளையத் தேவா’வில் அனைவரது பார்வையும் விழும்படி நடித்திருந்த நடிகை தன்யா, அதன்பின் ‘பிருந்தாவனம்’ படத்தில் நம்மைக் கொள்ளைகொண்டவர். அவருக்கும் ‘கருப்பன்’ பெரிய வெற்றியைத் தந்து இன்டஸ்ட்ரியிலிருக்கும் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா புகழில் கொஞ்சம் தானும் சேரும் அளவுக்கு இருக்கும் எனக் கணிக்கிறார்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *