Rஸ்கெட்ச்: பொறுமையிழந்த தமன்னா!

Published On:

| By Balaji

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. இதன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் டீசர் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அதற்கான தேதி செப்டம்பர் 22 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், **“இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும், நான் உண்மையில் உற்சாகத்துடன் இருந்தேன். இனியும் காத்திருக்க முடியாது”** என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, **“இது ஓர் அற்புதமான பயணமாக இருந்தது. பல நல்ல விஷயங்களை இந்தப் படத்தில் நடித்தபோது கற்றுக்கொண்டேன்”** என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமன்னாவின் பதிவுக்குப் பதிலளித்துள்ள இயக்குநர் விஜய் சந்தர், **“படத்தை முடிக்க உறுதுணையாக இருந்த உங்களுக்கு என் நன்றி. படப்பிடிப்பின்போது உறுதுணையாகவும், ஆதரவோடு இருந்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை”** என்று மறுமொழி கூறியுள்ளார்.

சிம்பு – ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கிய ‘வாலு’ படமும், பாகுபலி படத்தை தொடர்ந்து தமன்னா சிம்புவுடன் நடித்த ‘AAA’ படமும் பெரிதளவில் வெற்றி அடையவில்லை. எனவே, தற்போது இருவரும் ஸ்கெட்ச் படத்தின் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel