நடிகர் வைபவ் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு படம்தான் ‘சிக்ஸர்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் சாச்சி இயக்குகிறார். இப்படத்தை வால்மேட் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவைக் காட்சிகள் அதிகமிருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மாலைக்கண் நோய் கொண்ட ஒரு கதாநாயகனையும், அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து சிக்ஸர் படத்தின் கதை சுழல்கிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘நீ எங்க வேணா கோச்சிகிணு’ என்ற இந்த கானா பாடலின் ரெகார்டிங் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சிவகார்த்திகேயன் ஏற்கெனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிக்ஸர் படத்திற்காக அருமையான பாடகரும், பன்முகத்திறமை கொண்டவருமான சிவகார்த்திகேயனுடன் ரெகார்டிங் பணிகள் நிறைவடைந்தன. குரல் கொடுத்ததற்கு ஆயிரம் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”