விம்பிள்டன் டென்னிஸில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் ருமேனியாவைச் சார்ந்த சிமோனா ஹாலெப்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் லண்டனில் நேற்று (ஜூலை 13) மாலை நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவைச் சார்ந்த தரவரிசைப் பட்டியலில் ஏழாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸை எளிதில் வென்றார். இதன்மூலம் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை ஹாலெப் முதன்முறையாக வென்றுள்ளார்.
இன்றுடன் நிறைவடையவுள்ள இந்தத் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், பெண்களுக்கான இரட்டையர் ஆட்டம், கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆகியவை இன்று மாலை நடைபெறவுள்ளது.�,