�வானிலை தகவல்களை வழங்கும் நம்ம உழவன் செயலியை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் வசித்து வருபவர் ஆசிரியர் செல்வகுமார். இவர் தினமும் வானிலை குறித்து ஆராய்ந்து மழை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் மழை விவரங்களை எழுதி வந்துள்ள ஆசிரியர் தற்போது, செல்போன்களின் பயன்பாட்டிற்குப் பிறகு குறுஞ்செய்தியாகவும் பிறகு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வானிலை தகவல்களை அனைத்துத் தரப்பினரிடமும் விரைவாகக் கொண்டு செல்லும் விதத்தில் ‘நம்ம உழவன்’ என்ற புதிய செயலியை ஜூலை 5, வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளார். இதற்கு மாடலாக, விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த செய்திகள் தெரிந்து கொள்வதற்காக உழவன் என்ற செயலியை அரசு தொடங்கியது. அதனை மாடலாக வைத்து இந்த நம்ம உழவன் செய்தியைக் கண்டுபிடித்துள்ளார். இது தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 24 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,