rராகுலுக்கு மிரட்டலா?: மறுக்கும் காங்கிரஸ்!

Published On:

| By Balaji

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கிழக்கு உபி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், இதற்குக் கட்சியினர் மறுப்புத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் உள்ளிட்டோர் தங்கள் பிள்ளைகளுக்கு சீட் கேட்டு தலைமையை வற்புறுத்தியதாகவும், வாரிசு அரசியலால் தான் காங்கிரஸ் தோல்வியுற்றதாக ராகுல் கடிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. தனது மகனுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவதாக மிரட்டினார் என்று சிதம்பரத்தை பார்த்து ராகுல் கூறியதாகவும் சொல்லப்பட்டது.

ராகுலைத் தவிர மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும், தங்கள் மகன்கள் போட்டியிடும் இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்று பிரியங்கா காந்தி கோபப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்கள் உட்பட நாட்டு மக்களிடம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று (மே 27) ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவு குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது. ஆனால் யூகங்கள் அடிப்படையில் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் சாவல்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதே தவிர குறிப்பிட்ட எந்த ஒரு நபரை பற்றியோ அவர்களின் செயல் குறித்தோ விவாதிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குக் கட்சியில் அனைத்து மாற்றங்களைச் செய்யவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊடகங்களும் மற்றவர்களும் அதற்கு மதிப்பளிக்க முன்வர வேண்டும். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் நடந்ததாகப் பரவி வரும் தகவல்களைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share