Rமரம் நடுவதே வாழ்வின் லட்சியம்!

public

வீடு கட்ட,சாலை அமைக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 85 வயதான முதியவர் 40 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை வளர்த்து சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்பையா(85) மரம் நடுவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ளார். இவர் பெரம்பலூர், அரியலூர், மதுரை, சேலம், தருமபுரி, நெல்லை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 20க்கும் மேற்பட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இவரின் சமூக சேவையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களும் பச்சை பசுமையாகக் காட்சியளிக்கிறது. அவரது குடும்பம், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அந்த ஊர் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். எங்கள் ஊரில் அவர் இருப்பது எங்களுக்குப் பெருமை என அம்மக்கள் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *