போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்யப்படுவதாக மத்திய குற்றப் பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கடந்த ஜூன் 25ஆம் தேதி ஹரிகுமார், சுரேஷ், சரவணன் மற்றும் குணாளன் உட்படச் சென்னையை சேர்ந்த 10 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து கொடுத்துள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்வதற்காகவே சென்னையில் பல்வேறு இடங்களில் அலுவலகம் வைத்தும் செயல்படுவதாகவும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 100 போலி பாஸ்போர்ட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இந்த நடவடிக்கையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும், இதுவரை யாருக்கெல்லாம் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 பேரும் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.�,