rபாஜக கூட்டணியா? அதிமுகவை அழுத்தும் மூவரணி!

Published On:

| By Balaji

அதிமுக – பாஜக கூட்டணி எப்படியாவது உண்டாகிவிடும் என்ற பாஜக எதிர்பார்த்திருந்த நிலையில், சில தினங்களாக அதிமுக, பாஜகவைக் கழற்றிவிடும் என்று தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலோடு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்… தலைவர்கள் சந்தித்ததால் அது தேர்தல் கூட்டணி ஆகிவிடாது என்று புது விளக்கம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

அக்கூட்டத்தில், ‘ஏற்கனவே நடந்த அதிமுக கூட்டத்தில் பாஜக கூட்டணிக்குக் கட்சியில் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக பாஜகவினரிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான தனது அடுத்த கட்ட திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு – தமிமுன் அன்சாரி – கருணாஸ் கூட்டணி மூலமாகச் செயல்படுத்த நினைக்கிறாராம் எடப்பாடி. இந்த மூவரையும் அதிமுக தலைமைத் தரப்பில் இருந்து தொடர்புகொண்டு, ‘அதிமுக பாஜக கூட்டணி உருவானால் தங்கள் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படவில்லை என்றால்கூட எங்களுக்கு அதிமுகவை ஆதரிப்பதா, அமமுகவை ஆதரிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி உருவானால் நாங்கள் தினகரனை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

கருணாஸ் அண்மையில்தான் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து ராசியாகியிருக்கிறார். ஆனால், அவரும் சசிகலாவைச் சிறையில் வைத்திருக்கும் பாஜகவுடனான கூட்டணியைத் தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை என்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தமிமுன் அன்சாரி இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார். நேற்று இரவு புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து தனது ஆதரவை அவருக்குத் தெரிவித்தார் தமிமுன் அன்சாரி. இதன் மூலம் எடப்பாடிக்கும் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதாவது பாஜக கூட்டணி அமைத்தால் நாங்கள் காங்கிரஸ் பக்கம்தான் என்பதுதான் தமிமுன் அன்சாரியின் செய்தி.

இந்த நிலையில்தான் இம்மூவரணியைத் தொடர்புகொண்ட அதிமுக தரப்பு, ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவர் விடுதலை போன்ற முக்கியப் பிரச்சினைகளில் மூவர் அணியினர் உங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டீர்கள். அதுபோல, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான உங்கள் நிலைப்பாட்டையும் நீங்கள் விளக்கி முதல்வருக்கு ஒரு கோரிக்கை வையுங்கள். நிச்சயம் அவர் அதை பரிசீலிப்பார் என்று கேட்டுக் கொண்டிருக்கிறதாம்.

இம்மூவரணி அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராகக் குரல் எழுப்பும்பட்சத்தில் அதையே பாஜக கூட்டணிக்கு எதிரான தன் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயலலாம் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share