வரும் ஜூன் மாதம் கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளதால் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் புதிதாகத் தொலைக்காட்சி வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், தனித்திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் 24 மணி நேர கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8ஆவது தளத்தில் இந்தத் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது, வரும் ஜூன் மாதம் இத்தொலைக்காட்சி சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாகத் தொலைக்காட்சி வாங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.
இது தொடர்பாக, நேற்று (மே 20) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழகப் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அலைவரிசை 200 என்ற தடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பு தொடங்குமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையொட்டி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் புதியதாக வாங்கிட வேண்டுமென்றும், ஏற்கெனவே உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை சீர் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதற்கான செலவினங்களுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி, பள்ளிகள் மூலமாக திரட்டப்பட்டு குவிந்த நிதி மற்றும் இதர நிதிகளை விதிகளின் படி பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளூர் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் செட் ஆஃப் பாக்ஸுடன் இணைப்பு வழங்க வரும்போது தலைமையாசிரியர்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/57)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
�,”