நரேஷ்
உலகம் முழுவதுமுள்ள விளையாட்டுகளுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவை பெரும்பாலும் மனிதர்களைப் பொழுதுபோக்கவும், அவர்களது சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, மன்னராட்சிக் காலங்களில் போர் இல்லாத சமயங்களில் விளையாட்டுகள் பெரியளவில் நடத்தப்பட்டன. அங்கு விளையாட பல நாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த விளையாட்டில், எந்த வீரர் வெல்கிறாரோ, அவரது நாடு வென்றதாகவே கருதப்பட்டது. அந்த நாடு மட்டுமே அந்த விளையாட்டில் தலைசிறந்தது எனப் பெயர்பெற்றது. இந்த வழக்கத்தைத் தான், பெரும் உயிர் சேதங்களையும், பொருள் சேதங்களையும் ஏற்படுத்திய போர்கள் உருவான பிறகு சில நாடுகள் கடைபிடிக்கத் தொடங்கின. இதனாலேயே இப்போது கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்றவற்றில் ஒரு நாட்டின் அணி வென்றால் அந்த நாடே வென்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆக்ரோஷம் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். அந்தவகையில், கபடி எனும் விளையாட்டு அதிகப்படியான சக்தியை வெளிப்படுத்த விளையாடப்படும் ஒன்று.
கபடி எனும் விளையாட்டு விளைந்த இடம் தென்னிந்தியப் பகுதி. ஆனால், வடநாட்டவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு கொண்டாடும் வணிக விளையாட்டாக இப்போது மாறியிருக்கிறது. அவர்கள் கபடியை மெய்சிலிர்த்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதன் தாய் மண்ணில் மெய் இல்லாத உயிராக ஊசாலாடிக்கொண்டிருக்கிறது கபடி.
நம் பாரம்பரியம், வீர விளையாட்டுகளால் நிரம்பியது. அவை வெறும் வீரத்தை மட்டுமல்ல, சகோதரத்துவம், ஒற்றுமை, குழு செயல்பாட்டுத் திறன், பன்மைத்துவம் என்று எண்ணற்ற திறன்களை வளர்த்துவருகின்றன என்று இப்போது ஆராய்ந்து ஆய்வறிக்கைகள் சமர்பிக்கின்றனர். ஏறு தழுவல், சிலம்பம், ரேக்ளா பந்தயம், கபடி, வில் வித்தை, வழுக்கு மரம், துண்டாட்டம் என்று ஏகப்பட்ட வீர விளையாட்டுகளை வளர்த்து வந்த மரபின் பிள்ளைகள் இன்று ஸ்மார்ட்ஃபோன்களிலும், விர்ச்சுவல் உலகத்திலும் தங்களை முதலீடு செய்துவருகின்றனர்.
கபடி என்பது அனைவருக்குமான விளையாட்டு. குழு விளையாட்டு, வீரம், ஒருங்கிணைப்பு, முடிவெடுக்கும் திறன் என்று ஐம்புலன்களையும் உள்ளடக்கிய விளையாட்டாக அது பார்க்கப்படுகிறது. இன்று எண்ணற்ற ஆய்வுகளால் இந்த எளிமையான விளையாட்டு விளைவுகளை அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள். உலக அளவில் இந்த விளையாட்டைக் கொண்டாடும் அளவிற்கு இந்தப் பொக்கிஷத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு சேர்க்கவில்லை. அப்படியொரு முயற்சியையே ‘வருண் அறக்கட்டளை’ முன்னெடுத்திருக்கிறது. லைட் ஹவுஸைத் தாண்டி வீசிய அந்த வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருந்தது? தொடர்ந்து பார்ப்போம்…
(முன்னேற்றம் தொடரும்…)
**விளம்பரக் கட்டுரை**
[சாட்சிகளாகும் நாளைய தலைமுறை!](https://minnambalam.com/k/2019/06/13/15)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
�,”