இம்மாத இறுதியான ஜூலை 26ஆம் தேதி ஆறு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்த புதிய படமும் தற்போது அப்பட்டியலில் இணைந்துள்ளது.
விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் படங்களைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இவ்வருடம் நான்காவது படமாக வெளியாகவுள்ளது கொலையுதிர் காலம். உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் படமிது. சென்ற மாதமே வெளியாகவேண்டிய இப்படம் தள்ளிப்போனது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா, 80களில் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதி பின் நாவலாக வெளியான புத்தகத்தின் பெயரே கொலையுதிர் காலம். இந்த டைட்டிலை தனது படத்திற்காக பதிவு செய்த நபர் தொடுத்த வழக்கால் இப்படம் வெளியாக தாமதமானது. அவ்வழக்கின் தீர்ப்பு படக்குழுவிற்கு சாதகமாக வந்த நிலையில், ஜுலை 26ஆம் தேதி கொலையுதிர் காலம் வெளியாகவுள்ளதாக இன்று(ஜுலை 18) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜுலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படங்கள்: சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் ‘சென்னை, பழனி, மார்ஸ்’,சுசீந்திரனின் ஏஞ்சலினா, சந்தீப்பின் கண்ணாடி, சமுத்திரக்கனியின் கொளஞ்சி, எஸ்.டி. ரமேஷ் செல்வனின் நுங்கம்பாக்கம் ஆகியவை. தனுஷ் நடித்த எனை நோக்கிப் பாயும் தோட்டா ஜுலை 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படாலும் இன்னும் அது சார்ந்த போஸ்டர்களோ மறு அறிவிப்போ வெளியாகவில்லை.
நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பிருக்கின்ற நிலையில், ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்தவாரம் வெளியாகும் டிஸ்னியின் தி லயன் கிங், விக்ரமின் கடாரம் கொண்டான், அமலா பாலின் ஆடை ஆகிய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து ஜுலை 26ஆம் தேதி ரிலீசில் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனதிரைவட்டாரங்கள் கூறுகின்றன .
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
�,”