rநதிகளை மீட்போம்: மாணவர்கள் மனிதச் சங்கிலி!

public

[

சமீப காலமாக நதிகளை மீட்போம் என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடந்துவருகின்றன. நம் நதிகள் அழிந்துகொண்டிருக்கின்றன என்பதைச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு இவை நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் நதிகளின் இணைப்பை வலியுறுத்தியும், நதிகளை பொதுமக்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும் நெல்லையில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நேற்று (செப்டம்பர் 5) நடத்தினர்.

நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையான கொக்கிரகுளம் பகுதியில், பள்ளி மாணவர்கள் கரங்களைக் கோர்த்து, பதாகைகளைக் கையில் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நதியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் “இன்று நதிகளை மீட்க மதி இல்லையெனில் நாளை அவன் வாழ்வை மீட்க நதி இருக்காது. நதிதான் ஒரு தேசத்தில் எல்லைக் கோடு. வீட்டின் கழிவறையில் வாழ்க்கை நடத்த முடியுமா? நதிகளைக் கழிவுகளாக்கி மனிதா… நாட்டையே கழிவுகளாக ஆக்கிவிட்டாயே..!” போன்ற கோஷங்கள் தாங்கிய விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நீர் ஆதாரத்தின் முக்கியத்துவம் பொதுமக்களுக்கு புரியாததால் நதியில் குப்பைகளைக் கொட்டிக் குப்பைக்கூடமாக மாற்றிவிட்டனர். பொதுமக்களுக்குக் குடிநீரையும், விவசாயிகளுக்குப் பயிர் செய்யத் தண்ணீரையும் கொடுக்கும் தாமிரபரணி ஆற்றைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *