Rநடிகை பாவனா : ஆபாச மெமரி கார்டு!

நடிகை பாவனா பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் உட்பட 8 பேரிடமிருந்து இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் பல்சர் சுனில் தலைமறைவாக இருந்த கோவையில் உள்ள வீட்டில் இருந்தும் , அவரது நணபர் அம்பலபுழாவைச் சேர்ந்த மனு வீட்டில் இருந்தும், 2 செல்போன்கள், மெமரி கார்டுகள், பென் டிரைவ் மற்றும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் நடிகை பாவானாவின் ஆபாச காட்சிகள் உள்ளதா என காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பல்சர் சுனில் படம் பிடித்த செல்போனை முதலில் தூக்கி எறிந்து விட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த வீடியோவை வேறொரு மெமரிகார்டில் பதிவு செய்து தனது வக்கீல் பவுலோசிடம் ஒப்படைத்ததாக சுனில் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செல்போன் மற்றும் மெமரிகார்டை ஆலுவா நீதிமன்றத்தில் பவுலோஸ் ஒப்படைத்துள்ளார். இந்த மெமரி கார்டை காவல்துறையினர் நீதிமன்றத்தில் இருந்து பெற்று தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதன் அறிக்கையை பொறுத்தே காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.

கைதான பல்சர் சுனிலின் கூட்டாளிகளான, சலீம், பிரதீப், மணிகண்டன், மார்டின் ஆகியோரின் போலீஸ் காவல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் தனிப்படை போலீஸார் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுசெய்து 4 பேரையும் மேலும் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர். இதே போல் பல்சர் சுனில், விஜிஸின் நீதிமன்ற காவல் 10ம்தேதியுடன் நிறைவடைகிறது. இவர்களது காவலையும் நீட்டிக்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts