Rதாவர எண்ணெய் இறக்குமதி உயர்வு!

Published On:

| By Balaji

நடப்பு பருவத்தில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்திய சல்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2018 நவம்பர் முதல் 2019 ஏப்ரல் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியா மொத்தம் 75,41,689 டன் அளவிலான தாவர எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் இதே பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 73,18,295 டன் அளவிலான எண்ணெயை விட 3 சதவிகிதம் கூடுதலாகும். எனினும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இறக்குமதி அளவு 13,86,466 டன்னிலிருந்து 12,32,283 டன்னாகக் குறைந்துள்ளது. இது 11 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

2018 நவம்பர் முதல் 2019 ஏப்ரல் வரையிலான பருவத்தில் 11,99,052 டன் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இதன் இறக்குமதி அளவு 9,80,353 டன்னாக மட்டுமே இருந்தது. பாமாயில் இறக்குமதி 45,74,098 டன்னிலிருந்து 45,80,359 டன்னாக உயர்ந்துள்ள நிலையில், சோயாபீன், சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் இறக்குமதி 25,72,653 டன்னிலிருந்து 26,23,471 டன்னாக உயர்ந்துள்ளது. எனினும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் பாமாயில் இறக்குமதி 8,02,443 டன்னிலிருந்து 7,07,450 டன்னாகக் குறைந்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share