Rதமிழில் பேசச் சொன்ன சபாநாயகர்!

Published On:

| By Balaji

மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிற சூழலில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தாலும் கூட்டத் தொடர் கூச்சல், குழப்பங்கள் இல்லாமல் சுமூகமாகவே நடைபெற்றுவருகிறது. விவசாயத் துறை மீதான மானியக் கோரிக்கை நேற்று நடந்ததையடுத்து, துறையின் அமைச்சர் துரைக்கண்ணு, துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் புள்ளிவிவரங்களுடன் தயார் நிலையில் ஆஜரானார்கள்.

விவாதத்தில் திமுக சார்பில் கேள்விகளைக் கேட்கக் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் தளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அப்போது, பிரகாஷ் தனக்கு தமிழில் சரியாகப் பேசமுடியவில்லை என்று கூறி தெலுங்கில் பேசுவதாகக் கூறினார். உடனே சபாநாயகர் தனபால், “அவையில் மொழிமாற்றம் செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லை, நீங்கள் பேசுவதும் பதிவாகாது. எனவே எல்லோருக்கும் புரியும்படி மெதுவாக தமிழிலேயே பேசுங்கள்” என்றார்.

பிரகாஷ் மீண்டும் தெலுங்கில் பேச முற்பட அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, “பன்மொழி பேசக்கூடிய அம்மா தற்போது இல்லை. அவர் இருந்தால் பல மொழிகளையும் பேசுவார். எங்களுக்கு அதுபோன்று தெரியாது. எனவே தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு” என்றார். ஆனால், எம்.எல்.ஏ பிரகாஷ் தமிழில் சரியாகப் பேசமுடியாமல் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பூண்டி கலைச்செல்வன் எழுந்து, கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணியில் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஆகியோரை பாராட்டிப் பேசினார். மீதமிருந்த 10 நிமிடங்களில் துறை ரீதியாக பேசி முடித்தார். எதிர்க்கட்சியிடமிருந்து பலமான கேள்விகள் எதுவும் வராததால் அவையில் விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மகிழ்ச்சியாகவே இருந்தார்.

சட்டசபையில் நேற்று மாலை நேரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெறும் 21பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் வெளிவேலையாக சென்றுவிட்டனர். திமுக எம்.எல்.ஏ.க்கள் இப்படியென்றால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர் வெளியில்தான் ஹாயாக சுற்றிவந்தார்கள் எனக் கூறுகிறார்கள் சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க வந்தவர்கள்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share