Rதனுஷுடன் இணைந்த காமெடி நடிகர்!

Published On:

| By Balaji

துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் முனிஸ்காந்த் இணைந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அசுரன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே தனுஷ், துரை செந்தில்குமார் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றில் கவனம் செலுத்தி வந்தார்.

கொடி திரைப்படத்திற்குப் பின் துரை செந்தில்குமாருடன் இணையும் தனுஷ், இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு கதாபாத்திரத்துக்கு சினேகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு மெஹ்ரீன் பிர்சாடாவும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் முனிஸ்காந்த் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த போஸ்ட் மேன் வெப் சீரியஸ் ஜீ5-ல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share