மதுரை மேலூர் அருகே உள்ள கூலானிபட்டியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன .
முன்னதாக நாம் தமிழர் கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 21-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆனால், எந்த இடத்தில் நடக்கும், எப்படி நடக்கும் என்பது சஸ்பென்ஸ். 21-ஆம் தேதி அலங்காநல்லூரில் காளைகள் சீறுவது மட்டும் உறுதி” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் மதுரை மேலூர் அருகே உள்ள கூலானிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. ஏறுதழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு காளைகள் வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்தன. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரிசுகளை வழங்கினார்.�,”