இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவில் பிரபலமான விளையாட்டு என்றால் கிரிக்கெட்டை நோக்கிதான் பலரும் கைகாட்டுவர். இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் பெரியளவில் பிரபலமாகாமல் இருந்த நிலையில் மிதாலி ராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றபின் அந்த நிலை மாறத்தொடங்கியது.
2006ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த அணிக்கு கேப்டனாக மிதாலிராஜ் செயல்பட்டார். 32 டி20 போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் மூன்று உலகக் கோப்பைத் தொடர்களும் (2012 ,2014, 2016) அடக்கம். ஒட்டுமொத்தமாக 88 டி20 போட்டிகள் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 2364 ரன்கள் எடுத்துள்ளார். 2000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஒருநாள் போட்டிகளில் மிதாலிராஜ் கேப்டனாக செயல்பட்டுவரும் நிலையில் டி20 போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து ஏற்கெனவே விலகியிருந்தார். தற்போது டி20 கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் செயல்பட்டுவருகிறார். 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் மிதாலிராஜை களமிறக்காதது அப்போது சர்ச்சையானது.
இந்நிலையில் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். “2006 முதல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிவருகிறேன். 2021 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் முழுக் கவனம் செலுத்த, டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு இன்னும் உள்ளது. பிசிசிஐ எனக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று மிதாலி ராஜ் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!](https://minnambalam.com/k/2019/09/03/25)**
**[தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!](https://minnambalam.com/k/2019/09/03/46)**
**[அதிகாரம் – அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!](https://minnambalam.com/k/2019/09/03/21)**
**[பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!](https://minnambalam.com/k/2019/09/03/40)**
**[ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!](https://minnambalam.com/k/2019/09/02/28)**
�,”