Rசோனியா அகர்வாலின் புது ‘ரூட்’!

public

நடிகை சோனியா அகர்வால் தான் நடிக்கும் படத்தில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.

செல்வராகவனின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சோனியா அகர்வால். விஜய், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்தபோதும் அவரால் தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.

அதே நேரம் சில தமிழ் படங்கள், சில மலையாளப் படங்கள், டிவி சீரியல்கள் என பிஸியாகவே இருந்துவருகிறார் சோனியா அகர்வால். இந்நிலையில் ‘உன்னால் என்னால்’ எனும் புதிய படத்தில் நடித்துவருகிறார் சோனியா. ஏஆர் ஜெயகிருஷ்ணா இயக்கும் இதை ராஜேந்திரன் சுப்பையாவின் ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. மொஹமத் ரிஸ்வான் இசையமைக்கிறார். கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெகா மற்றும் உமேஷ் ஆகிய இருவர் முன்னணி ரோலில் நடிக்கும் இப்படத்தில், நிஹாரிஹா, லுப்னா, சஹானா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் சோனியாவுக்கு முக்கியமான வில்லி ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் சோகமே உருவான தோற்றத்தில் வலம்வரும் சோனியா இந்தப் படத்தில் தடாலடியான ஒரு வில்லியாக வலம்வரவுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *