Rசென்னை: தீக்கிரையான குடிசைகள்!

Published On:

| By Balaji

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள டுமீல்குப்பத்தில் குடிசை வீடுகள் அதிகமுள்ளன. இன்று (மே 18) அதிகாலையில் இப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் திடீரென்று தீப்பற்றியது. கோடை காலம் என்பதால் தீ மளமளவென்று பரவியது. இதனால், தூங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்து அலறினர். தீ விபத்து குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மெரினா கடற்கரை பகுதியிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றன.

தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. வீட்டினுள் இருந்த கட்டில், பீரோ உட்பட அனைத்துப் பொருட்களும் தீக்கு இரையாகின. குடிசை வீடுகளுக்குள் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ வேகமாகப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் காலை வேளையில் பட்டினப்பாக்கம் பகுதி முழுக்கவே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின் கசிவே இதற்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share