rசூட்கேஸ் அரசா மோடி அரசு: நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சூட்கேஸ் எடுத்துச் செல்லாதது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று (ஜூலை 20) உலக நகரத்தார் வர்த்தக மாநாடு-2019 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய நிர்மலா சீதாராமன், “தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகளில் அந்த நாட்டின் சின்னங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நகரத்தார் மூலமாக உருவாக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் போலவே தென்கிழக்கு ஆசியாவில் பல பிரமாண்ட கோவில்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சூட்கேசில் எடுத்துச்செல்லாதது குறித்து பேசிய அவர், “சூட்கேஸ் என்றால் எனக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது. சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை. மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசும் இல்லை.அதற்காகவே நான் துணிப்பையில் எடுத்துச் சென்று பட்ஜெட் தாக்கல் செய்தேன்” என்றும் பேசினார்.

நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு துறைகளிலும் இந்தி திணிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “இந்தித் திணிப்பு என்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. மத்திய அரசு இந்தியை திணிப்பதில்லை. தபால் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறுகள் குறித்து கேள்வி கேட்பதில் தவறில்லை. அதைவிட்டுவிட்டு உடனே இந்தித் திணிப்பு என்று கருத்து கூறுவது சரியல்ல” என்று தெரிவித்தார் நிர்மலா.

மேலும், “மத்திய அரசின் ஸ்ரேஷ்ட பாரத் திட்டம் மூலம் ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநில மொழிகளில் ஏதோ ஒன்றை பயில்வதற்கான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. அதில் தமிழைக் கூட வட இந்திய மாநிலங்களில் பரப்புவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது” என்று விளக்கியவர், நிர்வாக ரீதியாக நடக்கும் தவறுகளால் இந்தி திணிப்பு என்ற முடிவுக்கு வரவேண்டாம் என்றும் தமிழை வளர்க்கும் முயற்சிகளில் மத்திய அரசும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share