rசிபிஐ: இயக்குநரை நீக்க வேண்டிய நிர்பந்தம்!

public

சிபிஐ நிறுவனத்தின் நம்பகத்தன்மையை காப்பாற்ற இயக்குநர் அலோக் வர்மாவை நீக்கும்படியான நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம் என்று மத்திய அரசு இன்று(டிச-5) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா ஒரு வழக்கில் 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். ராக்கேஷ் லஞ்சம் வாங்கிய வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டின்அடிப்படையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அவரது ஆதரவு அதிகாரிகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அலோக் வர்மா பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் சிபிஐயின் இரு இயக்குநர்களிடையே மோதல் ஏற்பட்டதால் நிறுவனத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளானது. அதனால் நிறுவனத்தை காப்பாற்ற வேறு வழியின்றி இயக்குநரை நீக்க வேண்டியதாயிற்று என்று தெரிவித்தார்.

முன்னதாக அலோக் வர்மாவின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமன் சிபிஐ இயக்குநரை நீக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிபிஐ இயக்குநரை நியமித்த கமிட்டியின் ஒப்புதலின்றி அவரை நீக்கக் கூடாது என்று வாதங்களை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால்,இவ்விவகாரத்தில்,மத்திய அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு எடுக்கும் வரை சிபிஐ நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கான ஊதியம் மற்றும்இதர படிகள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *