Rகிச்சன் கீர்த்தனா: பிரெட் தோசை

Published On:

| By Balaji

அலுவலகத்திலிருந்து வந்த பெரியவர்களுக்கும், பள்ளியிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் மாலை நேரங்களில் அசுரத்தனமாகப் பசி உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலிருக்கும் பொருள்களைக்கொண்டு இந்த டேஸ்ட்டி பிரெட் தோசையைச் செய்து அசத்தலாம். இதை இரவு நேர உணவாகவும் பயன்படுத்தலாம்.

**என்ன தேவை?**

பிரெட் துண்டுகள் – 3

ரவை – அரை கப்

மைதா – ஒரு டேபிள்ஸ்பூன்

தயிர் – கால் கப்

சீரகம் – கால் டீஸ்பூன்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மிக்ஸியில் பிரெட் துண்டுகள், மைதா, ரவை சேர்த்து ஒருமுறை ஓட்டுங்கள். பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓட்டுங்கள். இந்தக் கலவையைப் பாத்திரத்தில் ஊற்றிச் சீரகம், உப்பு, கொத்தமல்லித்தழை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும் (தோசை மாவு பதத்துக்கு வர சிறிதளவு தயிரையும், தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளலாம்). தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசையாக ஊற்றி, எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.இதற்குத் தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

**சிறப்பு**

சாதாரண பிரெட்டுக்குப் பதிலாக, கோதுமை பிரெட்டைச் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது.

[நேற்றைய ரெசிப்பி: மஷ்ரூம் கிரேவி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/12/4/mushroom-gravy-kitchen-keerthana)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share